தரம் 01 முதல் தரம் 05 வரையான ஆரம்ப பிரிவு மாணவர்கள் முன்பள்ளி மாணவர்கள், மற்றும் தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று காலை கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்பள்ளிகள் ஆரம்ப பாடசாலைகள், மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் சரியான நேரத்தில் திறக்கபடும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.