எதிர்வரும் காலங்களில் முட்டையொன்றின் விலை 75 ரூபா வரை உயர்வடையும் என தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.*
நாட்டில் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழில் பாரிய வீழ்ச்சி நிலையை அடைந்துள்ளதாக தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யு சிறில் தெரிவித்துள்ளார்.*
தற்போதைய நிலையில், கோழிகளின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதால், முட்டை மற்றும் கோழி இறைச்சித் தொழிற்துறையை மீள முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மேலும் காலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.*
வர்த்தக அமைச்சு முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவதற்கு முன்னர், கால்நடைவள அபிவிருத்தி சபையில் எவ்வித ஆலோசனைகளையும் பெறவில்லை. முட்டையொன்றுக்காக 49 ரூபா செலவாகின்றது.*
இவ்வாறிருக்கையில், வெள்ளை முட்டையொன்று 43 ரூபாவுக்கும், சிவப்பு முட்டையொன்று 45 ரூபாவுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்கத்தினால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*
இதனால் பலர் இந்த தொழிற்துறையை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.*
வருடம் ஒன்றுக்கு, 80 ஆயிரம் முட்டையிடும் கோழிகள் உருவாக்கப்படும் நிலையில், முட்டை தீவணம் இன்மையினால் குறித்த எண்ணிக்கை தற்போது 10 ஆயிரம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன.*
இதன்காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் முட்டையொன்றின் விலை 75 ரூபா வரை செல்லும் என தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யு சிறில் குறிப்பிட்டுள்ளார்.*
தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்மோடு..!*