முச்சக்கர வண்டி அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடும் முறை அறிமுகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முச்சக்கர வண்டிகளில் பாகங்களை பொருத்துவதற்கும் அலங்காரங்களை மேற்கொள்வதற்குமான கட்டணம் அறவிடும் முறையை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் கீழ் முச்சக்கர வண்டிகளுக்கு பின்னால் மேலதிகமாக (ஏணி போன்ற) அலங்காரங்களை மேற்கொள்வதற்கு 1000 ரூபா அறவிடப்படவுள்ளது.

முன்பக்க ஒற்றை மின் விளக்கிற்கு பதிலாக இரண்டு மின் விளக்குகளை பொருத்தினால் 2500 ரூபா வசூலிக்கப்படும்.

பிரதான மின் விளக்குகளுக்கு பதிலாக LED விளக்குகளை பொருத்துவதற்கு 1000 ரூபா கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

மூன்று பாகங்களைக் கொண்ட முன் கண்ணாடியை  தனிக்கண்ணாடியாக பொருத்துவதற்கு 2500 ரூபா அறவிடப்படவுள்ளது.

Share this Article