By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகள் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக!!
Share
Notification
Latest News
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
இலங்கைச் செய்தி
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகள் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக!!
யாழ்ப்பாணம்

முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகள் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக!!

Last updated: 2024/07/16 at 10:29 PM
Published July 16, 2024 231 Views
Share
2 Min Read
SHARE

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில்ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடைவிதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எனினும், வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்தியகுற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸில்முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வைத்தியர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாளை ஆதாரங்களைசமர்ப்பிக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் பொலிஸாருக்குஉத்தரவிடப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு அமைய இன்றுஇந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  

இந்நிலையில், தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதை வைத்தியர்அர்ச்சானா உறுதிப்படுத்தி, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

சாவகச்சேரி வைத்தியர்களுக்கு எதிரான அவதூறு உள்ளிட்ட விவகாரங்களில்சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான 3 முறைப்பாடுகளில் இன்றையதினம் (ஜூலை16)  வைத்தியர்அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையில் முறைப்பாடளித்த வைத்தியர்கள் சார்பில்சட்டத்தரணிகள் திருக்குமரன், குருபரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்படி ,நீதிவான் நீதிமன்றம் 75 ஆயிரம் ரூபா ஆள் பிணை மற்றும்நிபந்தனைகளுடன் விடுவித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்தியஅத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரிநீதிவான் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றின் மீதான விசாரணைகள் இன்று மன்றில் நடைபெற்றன. அதன்போது, வைத்தியர் மன்றில் முன்னிலையாகி இருந்துள்ளார்.

இதன் போது வழக்குத் தொடுநர்கள் சார்பாக ந.குருபரன், திருக்குமரன்உள்ளிட்ட நான்கு சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர். எதிராளிசார்பாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை.

வைத்தியர் அர்ச்சுனாவே தன் பக்க நியாயங்களை முன்வைக்க சந்தர்ப்பம்வழங்கப்பட்டது. இருபக்க வாதங்களையும் செவிமடுத்த நீதவான், வைத்தியர்கள்தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களுடன்சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறுவைத்தியர் அர்ச்சனாவுக்கு உத்தரவிட்டதோடு ஒவ்வொரு வழக்கிலிருந்தும் தலா75 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அவரை விடுவித்தார்.

எதிராளி ஆதாரங்களுடன் வாக்குமூலம் வழங்காவிட்டால் அவர் மீது வழக்குதொடரலாம் எனவும் பொலிஸாருக்கு நீதவான் அறிவுறுத்தினர்.

மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சுமுகமான செயற்பாட்டிற்காக, முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவை வைத்தியசாலையின்நிர்வாக செயல்பாடுகளில் தலையிடவும், வைத்தியசாலைக்குள் நுழையவும் தடைஉத்தரவு பிறப்பித்தார்.

இருந்தபோதிலும் வைத்தியசாலையின் விடுதிக்குள் தங்குவதற்கு மட்டும் அனுமதிவழங்கினார்.

அதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை இம்மாதம் 31ஆம் திகதிக்குதவணையிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது

You Might Also Like

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

SUB EDITOR July 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில்!!
Next Article மூடப்பட்டது கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?