மீண்டும் யாழ்.போதனாவில் விழித்திரை சத்திர சிகிச்சை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

விழித்திரை சத்திர சிகிச்சை, சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினாலும் அச்சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் கடந்த இரண்டு வருடங்களாக யாழ் போதனா வைத்திய சாலையில் நடைபெறவில்லை.

இந்த நிலை மாறி தற்பொழுது விழித்திரை சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ஷைலா பரதன் பதில் கடமையேற்றுள்ளார்.

அவர் தமது சேவையை மக்களுக்கு வழங்கு முகமாக வாரத்துக்கு ஒருமுறை ஆறு பேர் வீதம் 100 சத்திர சிகிச்சைகளை நாளை(ஜூன் 23) முதல் மேற்கொள்ளவுள்ளார்.

ALAKA Foundation, Malaysia நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இந்த நிகழ்ச்சித்திட்டமானது யாழ் போதனா வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article