மீசாலையில் இனம்தெரியாத நபர்களால் வீடு தீக்கிரை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின் மீது இனம்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(ஒக்ரோபர் 6) நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத குழுவினர் வீட்டில் காணப்பட்ட பொருட்களுக்கு தீயிட்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி பெட்டி மற்றும் வீட்டுத் தளபாடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, வீட்டில் தாய் மகள் பேரப்பிள்ளைகள் என ஐவர் இருந்துள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை. தீ பரவுவதை கண்ணுற்ற அயலர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article