நெடுந்தீவு பிரதேசத்திற்கான தடையற்ற மின் விநியோகத்தினை வழங்கும் வகையில் கடந்த சனிக்கிழமை (மே 18) மின்பிறப்பாக்கி கொண்டுவரப்பட்ட நிலையில் அதற்கான பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணி இடம்பெற்றுவருவதுடன் அதன்பின்னரே பிரதான மின்மார்க்கத்துடன் இணைக்கப்பட்டு சீரான விநியோகம் மேற்கொள்ளப்படும் என தெரியவருகின்றது.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெரும் முயற்சியினால் கடற்படையினரது உதவியுடன் 380 கிலோவாட்ஸ் மின்பிறப்பாக்கி ஒன்று நெடுந்தீவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.