மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தெல்லிப்பழை, கட்டுவன்புலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக நேற்றுமுன்தினம் (மார்ச் 5) உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பகுதி சேர்ந்த 18 வயதான எஸ்.மாதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டும் பொழுது அது பிரதான அதிஉயர் மின்கம்பியில் தொடுகையுற்றுள்ளது. மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article