மின்கம்பி அறுந்து வீழ்ந்ததில் தூக்கி வீசப்பட்ட பெண்!- வட்டுக்கோட்டையில் சம்பவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழில் மின்கம்பி அறுந்ததில் பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று(ஒக்ரோபர் 7) யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பனை மரம் ஒன்றினை வெட்டும்போது பனைமரம் மின்கம்பி மீது வீழுந்துள்ளது.

இதனையடுத்து மின்கம்பி அறுந்து வீதியில் நின்ற பெண் ஒருவரின் மோட்டார் சைக்கிளின் மீது வீழ்ந்ததில்
மோட்டார் சைக்கிளில் இருந்த அப்பெண் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் ஆம்புலன்ஸ் வண்டி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிள்றார்.

மேலும் அப்பகுதியில் இச்சம்பவத்தால் ஐந்து மின் கம்பங்கள் முறிந்து சேதமாகிய நிலையில் அப்பகுதிக்கு மின்சாரம் தடைப்பட்டது. இந்நிலையில் மின்சார இணைப்பினை சீர் செய்யும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article