நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான படகு சேவை இன்று(செப்ரெம்பர் 10) பெரும் சிரமத்தை உண்டு பண்ணியதாக பாதிக்கப்பட்ட பயணிகள் பெரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிச் சென்ற நெடுந்தீவு பல நோ. கூ. சங்கப் படகான சமுத்திரதேவா குறிகாட்டுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு மீண்டும் நெடுந்தீவு திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அதன் காரணமாக நெடுந்தீவுக்கான காலை நேர சேவை இடம்பெறவில்லை. இதேவேளை படகினை திருத்தம் செய்து புறப்பட ஆயத்தமான நிலையில் மீண்டும் அது பழுதடைந்தமையால் பயணிகள் பெரும் அசவுகரியங்களை எதிர்கொண்டதாக தெரிய வருகின்றது.
இதேவேளை நெடுந்தீவில் இருந்து பகல் 11:30 மணிக்கு வழமையாக புறப்படும் தனியார் படகான கரிகணண் சேவை மூலமாகவே மாலை 2:30 மணிக்கு காலைமுதல் குறிகாட்டுவானில் தங்கியிருந்த பயணிகளும் நெடுந்தீவுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை நெடுந்தீவிலிருந்தான மாலைநேர படகுசேவை படகு சேவை இடம்பெறாமையால் அங்கிருந்து யாழ்நகர் திரும்ப இருந்த பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் மாலை 4.30 மணிக்கே மீண்டும் நெடுந்தீவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குறிகட்டுவான் நோக்கி சென்றதாகவும் மீளவும் சுமார் 60 பயணிகளுடன் இரவு 7.30 மணிக்கு நெடுந்தீவை சென்றடைந்துள்ளது கரிகணண் படகு.
பெரும் சிரமங்களின் மத்தியில் தற்போதைய காற்று பலமான காலத்தில் பெரும்பாலான பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும் .
படகு பழுதடைந்த போது அதற்கான மாற்று ஒழுங்குகளை சமுத்திர தேவ படகு உரிமையாளர்களோ படகு சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளோ இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என பயணிகள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.