மாதகலில் உதவித் திட்டம் வழங்குவதற்காக விவரம் சேகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாதகலில் பொருளாதார ரீதியாக நலிந்த 15 குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விவரம் இன்று (பெப்ரவரி 24) திரட்டப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தன.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாதகல் தெற்கைச் சேர்ந்த 15 மீனவக் குடும்பங்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அதற்கான விண்ணப்பப்படிவம் நிரப்பப்பட்டதுடன் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Share this Article