மாகணமட்டத்தில் புதிய சாதனையை மன்னார் தட்சனாமருதமடு மகாவித்தியாலய மாணவி நிலைநாட்டியுள்ளார்.
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிலே நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று(செப்ரெம்பர் 9) இடம்பெற்ற 16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 300 மீற்றர் தடைதாண்டல் போட்டியிலே மடுக்கல்வி வலயத்திற்குட்பட்ட
தட்சனாமருதமடு மகாவித்தியாலய மாணவி யோ.சுடர்மதி புதிய சாதனையை (record break) நிலைநாட்டியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மாணவி ஒருவர் குறித்த நிகழ்வினை 51.7 செக்கன்களில் முடித்து சாதனை நிகழ்த்தி இருந்தார் .
அதனை நேற்று இடம்பெற்ற போட்டியிலே யோ.சுடர்மதி் 50.08 செக்கன்களில் ஓடி முடித்து புதிய மாகண சாதனையை நிலைநாட்டியுள்ளார்.