மழைக்கால அனர்த்தங்களை எதிர்கொள்வது தொடர்பில் ஆளுநர் கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கும் அனர்த்த முகாமைத்துவப் பணிகளை முன்னெடுப்பதற்கும் பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.மேடகொடவுக்கும் இடையில் கலந்துரையாடல் இன்று (10.11) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் மழைக்கால அனர்த்தங்களின்போது பாதுகாப்புப் படைகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.மேடகொட கடந்த நவம்பர் 2 ஆம் திகதி யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் 36ஆவது கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment