வேலணை பிரதேச செயலக சுற்றுச்சூழல் பேரவையால் மண்டைதீவு சந்தியை அண்டிய கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவரங்கள் இன்று(ஓகஸ்ட் 10) நடுகை செய்யப்பட்டது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் இந்த கண்டல் தாவரங்கள் நடப்பட்டன.
இந்த நிகழ்வில் வன வள திணைக்களம், கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் , மத்திய சுற்றாடல் அதிகார சபை, கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை என்பவற்றின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் A B C Eco Consultant Pvt Ltd நிறுவனத்தினர் இந் நிகழ்விற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தனர்.