மட்டுவில் வடக்கு பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார்.

மட்டுவில் வடக்கை சேர்ந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே நேற்று(ஜூலை 26) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையடிக்கும் நோக்கில் மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அவரின் தலையில் பலமாகத் தாக்கப்பட்ட அடையாளமும், கையில் வெட்டுக்காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு சென்ற சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மூதாட்டி சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கோப்பாய் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article