மட்டக்களப்பில் தீ விபத்து!- பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து சேதம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி பிரதான வீதியில் வர்த்தக நிலையங்கள் மீது ஏற்பட்ட தீ பரவலினால் புடவைக் கடை உட்பட மூன்று கடைகள், வாகனங்கள் கழுவும் இடம் மற்றும் வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

இச்சம்பவம் நேற்று (நவம்பர் 7) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பொதுமக்களின் உதவியோடும் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article