தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துக் கொண்டு ஒருசிலர் மக்களுக்கு எதிரானசெயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எமதுகட்சியையும் சிரதமானம் செய்துள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (நவம்பர் 21) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கைபிரகடன உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதொன்று தற்போது இல்லை. இலங்கைதமிழரசுக் கட்சியே பிரதான கட்சியாக உள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளும்சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துக் கொண்டு ஒருசிலர் மக்களுக்கு எதிரானசெயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எமதுகட்சியையும் சிரதமானம் செய்துள்ளார்கள்.
தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால் இலங்கை தமிழரசுக் கட்சி 2020 ஆம்ஆண்டு பொதுத்தேர்தலில் 6 ஆசனங்களை கைப்பற்றியது. இம்முறை எட்டாகஉயர்வடைந்துள்ளது. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் என்றும் எம்முடனேஉள்ளார்கள்.
நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நாங்கள்என்றும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். தமிழ் மக்களின் அடிப்படைபிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி, பிரதமருடன்பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என்றார்.