2022 ஆம் ஆண்டு போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 729 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோய்ன், கஞ்சா, ஐஸ் என ஒட்டுமொத்தமாக சுமார் 20 ஆயிரம் கிலோ உயிர்கொல்லிப் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆண்டுதோறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. 2019ஆம் ஆண்டு 89 ஆயிரத்து 321 பேரும், 2020ஆம் ஆண்டு 97 ஆயிரத்து 416 பேரும் போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையில் கொழும்பு முதலாமிடத்திலும், கம்பஹா, குருநாகல் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. 2022ஆம் ஆண்டு ஆயிரத்து 677 கிலோ 102 கிராம் ஹெரோய்னும், 17 ஆயிரத்து 607 கிலோ 422 கிராம் கஞ்சாவும், 283 கிலோ 873 கிராம் ஐஸும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.