போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்கு ஈரான் பிரஜைகளுக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வெளிநாட்டவர்கள் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஈரான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

4 வருடங்களுக்கு முன்னர் கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 80 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கைச்சாத்திட்ட சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம், குறித்த சிறைத்தண்டனையை அனுபவிக்கும் வகையில் பிரதிவாதிகளை ஈரானுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share this Article