யாழ் நகரில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளைகடத்திச் சென்ற நபரொருவர் நேற்று (ஒக்.27) இரவு கைதுசெய்யப்பட்டார்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டு கடத்தலுக்குபயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும் ஏற்கனவே ஹெரோயின்போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில்விடுவிக்கப்பட்டவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கைதிலிருந்து தப்புவதற்காக தமக்கு கையூட்டு வழங்கமுயற்சித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம்நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.