பொறுப்பேற்கப்படாத வாகன இலக்கத் தகடுகளை திருப்பி அனுப்ப நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பொறுப்பேற்கப்படாத வாகன இலக்கத் தகடுகள் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளன என்று யாழ். மாவட்டச் செயலர் அறிவித்துள்ளார்.

மோட்டார் வாகன போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை யாழ். அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட வாகன இலக்கத் தகடுகளில் பொறுக்பேற்கப்படாதவை மீளத் திருப்பி அனுப்பப்படவுள்ளன.

வாகன உரிமையாளர்கள் வாகனப் பதிவுப் புத்தக்ம், தேசிய அடையாள அட்டை, பழைய வாகனத் தகடுகள், மற்றும் வாகன இலக்கம் பதித்த ஒட்டும்தான் என்பவற்றை எதிர்வரும 30 ஆம் திகதிக்கு முன்னர் யாழ்ப்பாணம் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து வாகன இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article