பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை – பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் போதனா வைத்தியசலையில் இன்று (09/05) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையினால் தீப்பரவலில் இருந்து பாதுகாக்கப்பட்ட மருந்துகளை உடனடியாகப் பொருத்தமான இடத்துக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளதாக யாழ் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் .

நோயாளர்களுக்கான மருந்து விநியோகத்தில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்

மருத்துவமனையின் உள்ளக மருந்துக் களஞ்சியத்திலிருந்தும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்தும் தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  பணிப்பாளர் தெரிவித்தார்.

Share this Article
Leave a comment