நெடுந்தீவு மக்களது போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நீண்ட நாட்களாக இறங்கு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
பயணத்தடை நீக்கப்பட்ட பின்னர் அனைத்து இடங்களிலும் பொதுப்போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டதற்கு அமைய போக்குவரத்து இடம் பெறுகின்ற போதும், நெடுந்தீவில் போக்குவரத்து இன்று (june 26) வரை இடம் பெறவில்லை.
இது தொடர்பாக இலங்கைப் பேருந்த சபையின் யாழ் காரியலயத்துடன் தொடர்பு கொண்ட போது இன்று (ஜீன் 26) மாலையில் சாரதி மற்றும் நடத்துனர் நெடுந்தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் நாளை முதல் போக்குவரத்து இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்ட போதும், எவரும் நெடுந்தீவுக்கு வருகை தரவில்லை
படகுப் போக்குவரத்தும் சீரானதாகவில்லை பேருந்து போக்குவரத்து இடம் பெறுவதுமில்லை என்பது மக்கள் குறையாக காணப்படுகின்றது.
நெடுந்தீவு மேற்கு பிரதேசத்தில் வாழும் மக்கள் பேருந்து இன்மையினால் போக்குவரத்து மேற்கொள்வது கடினமாக காணப்படுவதுடன், அதிக பணம் கொடுத்து தங்களுக்கான போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர் இதனால் வருமானம் குறைந்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
காலையில் 06.30 மணிக்கு பிரயானம் மேற்கொள்ளப்டுவதால் அதிகாலையில் எழுந்து இறங்கு துறைமுகத்திற்கு வருவது மிகவும் வேதனை தரும் விடயமாக காணப்படுவதாகவும் போக்குவரத்தில் மேற்குப் பிரதேச மகக்ள் புறம் தள்ளப்படுவதாகவும் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட அன்றைய தினம் இறங்கு துறைமுகத்தில் பேருந்தினை நிறுத்தி விட்டு சாரதி மற்றும் நடத்துனர்கள் யாழ் சென்றவர்கள் தான் இன்று வரை யாரும் திரும்பி பார்க்கவில்லை மக்கள் நடமாடும் பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வகையில் பேருந்து தரித்து நிற்பது பொறுப்பற்ற தன்மையினையும் சுடடிக்காட்டுகின்றது.
உரிய அதிகாரிகள் நெடுந்தீவு மக்களது போக்குவரத்தில் உரிய கரிசனை செலுத்துவது மிக அவசியம்.