பேராசிரியர் எம் சின்னத்தம்பியின் தன்வரலாற்று நூல் வெளியீடு!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறையின் ஓய்வு நிலை பேராசிரியர் மா. சின்னத்தம்பி அவர்களின் தன் வரலாற்று நூல் “வகுப்பறையின் குரல்” என்ற பெயரில் நேற்று (02.11) திங்கள் மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர்

தி. வேல்நம்பி கலந்து கொண்டார்

செஞ்சொற்செல்வர் கலாநிதி

ஆறு. திருமுருகன் ஆசியுரையையும் யாழ். பல்கலைக்கழகக் கல்வியியல்துறைத் தலைவர் பேராசிரியர் ஆ.நித்திலவர்ணன் வாழ்த்துரையையும் வழங்கினர்.

நூலின் வெளியீட்டுரையை நூலின் பதிப்பாசிரியரும் யாழ். பல்கலைக்கழகக் கல்வியியல் துறை விரிவுரையாளருமாகிய இ.சர்வேஸ்வரா ஆற்றினார் . நூல்நயப்புரையை வலம்புரி பத்திரிகை ஆசிரியர் ந.விஜயசுந்தரம் ஆற்றினார்.

நூலின் முதன்மைப் பிரதிகளை தொழிலதிபர் சண்முகநாதன் ஹரிகரன், பேராசிரியர்

ஆ. நித்திலவர்ணன், தீவகக் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சாட்சரம் கணேசன்  கல்வியியல் துறை விரிவுரையாளர் கலாநிதி விஜய பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜா பேராசிரியர் குகபாலன் கலைப்பீடாதிபதி பேராசிரியர்

நா. பிரதீபராஜா பேராசிரியர் எம் எஸ் இடம் கற்ற முன்னாள் மாணவர்கள் தற்போது கல்வியில் துறையில் கற்பவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்

Share this Article
Leave a comment