பெண் படுகொலை வழக்கில் 5 மாதங்களின் பின்னர் சந்தேகநபர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்க்கட்டுப் பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 5 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் இந்துருவ பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 60 வயதான நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று(செப்ரெம்பர் 10) முல்லைத்தீவு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.

Share this Article