பெண்ணின் உயிரைப் பறித்த ஆட்டிறைச்சி எலும்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கியதால் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா என்ற 46 வயதுப் பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தாயாவார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி ஆட்டிறைச்சி சாப்பிடும்போது எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது. அதையடுத்து அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதிவரை இறங்கி சிக்கிக் கொண்டுள்ளது.
மறுநாள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அவரது வாய் ஊடாக கமரா செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். அதற்கு அனுமதிக்காத குடும்பப் பெண் வீடு திரும்பியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை குருதி வாந்தி எடுத்ததை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே குருதி வாந்தி ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Share this Article