தொழிற் கல்வித்துறைகளில் (Vocational Sectors) தொழிற்பயிற்சி முயற்சியாளர்களினை முன்னேற்றும், கல்வி அமைச்சின் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பிரிவின் கீழ் உள்ள திறன்கள் துறைகளினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் (SSDP – Skills Sectors Development Program) தனியார் துறையில் பெண்களினை வலுவூட்டும்
செயற்திட்டத்தின் (Private Sectors Women Empowerment Project) கீழ் 17 பயனாளிகளுக்கு மானியமாக தலா 5 லட்சம் ரூபா காசோலைகள் வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனின்
தலைமையில் கடந்த 29 ஆம் திகதி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த பயனாளிகள் அவர்களின் வியாபாரத்தினை விருத்தியாக்கும் நோக்கில் 05 நாட்கள் வியாபாரத்தினை முன்னேற்றும் (Improved Your Business IYB ) வதிவிடப்பயிற்சியை முடித்து வியாபாரத்திட்டத்தினை சமர்ப்பித்தமைக்கு அமைவாக இந்த மானியம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்ட செயலாளர், பிரதிப் பணிப்பாளர் திட்டமிடல், மாவட்ட
ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர், இணைப்பாளர் (திறன்கள் துறைகளினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம்) (SSDP), திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.