புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப் பட்டறை நூலக நிறுவனத்தால் முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயன்முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தன்னார்வலர்களுக்கான புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப்பட்டறை அடுத்த மாதம் ஏப்ரல் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை இல:55, சோமசுந்தரம் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இப் பயிற்சிப் பட்டறையில் சுரேன் போடோகிராஃப்பியின் நிறுவனரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகக் கற்கைகள் விரிவுரையாளருமான சுரேந்திரகுமார் கனகலிங்கம் அவர்கள் வளவாளராக கலந்துகொள்வார்.

நூலக நிறுவனமானது ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல புகைப்பட ஆவணமாக்கலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களை இப்பயிற்சி பட்டறையில் பங்குபற்றி பயனுறுமாறு அழைத்து நிற்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள கூகுள் படிவத்தை பூரணப்படுத்தவும்.

https://forms.gle/C1oYpJqas4xZ7F8u5

Share this Article