பாலைதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழாவில் 6ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இன்று (07/03) காலை நடைபெற்றது.

கடந்த 04ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நேற்று (06/03) மாலை நற்கருணைவிழா இடம்பெற்றது.

இன்று திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் நேற்று நற்கருணைவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

இவ்வழிபாடுகளில் வடபகுதியைச் சேர்ந்த சுமார் 6000 பக்தர்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment