பாலியல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை பெற்ற தனுஷ்க குணத்திலக்க!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சிட்னியில் பாலியல் துஷ்ப்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க குற்றமற்றவர் என நிவ் சௌத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில், பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கு இன்று (செப்ரெம்பர் 28) விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சாட்சி கோரல்கள் மற்றும் எழுத்துமூல சமர்ப்பனங்கள் கடந்த 4 நாட்களாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.2022 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் 29 வயதுடைய பெண் ஒருவரை தனுஷ்க குணத்திலக்க சிட்னியில் சந்தித்துள்ளார்.

இதனையடுத்து அவர் குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த முறைப்பாட்டுக்கமைய தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக அவுஸ்ரேலிய அரச சட்டத்தரணி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதன் அடிப்படையில் தனுஷ்க குணதிலக கடந்த நவம்பர் 6 ஆம் திகதி அதிகாலை சிட்னியில் கைதானார்.

Share this Article