பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு வேண்டி யாழில் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு வேண்டி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு முன்னால் நேற்று (ஒக்ரோபர் 21)கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் அன்று முள்ளிவாய்க்கால் இன்று காசாவா?, பலஸ்தீன மக்களே நாங்கள் உங்களுடன் நிற்கிறோம், இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களே பலஸ்தின மக்களை அழிக்காதே! மற்றும் இஸ்ரேலின் மிலேச்சத்தனத்திற்கு இறுதி முடிவு வேண்டும்.

போன்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்

Share this Article