பாடசாலை கட்டிடத்தின் கூரையிலிருந்து பல வெடிபொருட்கள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாத்தறை வெல்லமட மகிந்த ராஜபக்ஸ வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப்பொருட்கள் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கட்டிடம் புனரமைக்கப்படும் நிலையில், இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, வெளிநாட்டு தயாரிப்பு என சந்தேகிக்கப்படும் ரீ -56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 21 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், வேறு வகையான 136 தோட்டாக்கள் மற்றும் 2 டெட்டோனேட்டர்கள் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Share this Article