பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டின் சிந்து, கைபர் பக்துவா, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களிலும் கராச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும் கனமழையால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன.

கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் கனமழை, வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்துள்ளன. பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

Share this Article