வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 110 பல்கலைக்கழக மாணவர்கள் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய பிரமாண்டமான மேடையில் சுவீஸ் வாழ் RIRA குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் U.K றஞ்சித் அவர்களின் முழுமையான அனுசரணையில் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
வ/தமிழ் மத்திய மகா வித்தியாலய அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நிகழ்வின் இணைப்பாளர் வ/ஸ்ரீ நாகராஜா வித்தியாலய ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில் பிரமாண்டமான மேடையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி செயலகத்தின் வட மாகாண அபிவிருத்திக்கான விசேட பிரிவின் ஜனாதிபதியின் மேலதிக இணைப்புச் செயலாளர் லக்சுமணன் இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதியாக வவுனியா தெற்குக் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வின் கௌரவத்திற்குரிய அதிதிகளாக வவுனியா தெற்குக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் சுகந்தி ஜெய்கீசன் அவர்களும், வவுனியா வடக்குக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான பிரபாகரன் , வாகீசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
அத்துடன் நிகழ்வின் ஆசியுரையிற்காக பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் V.K.பவன் அவர்களும், தெற்கு வலய ஓய்வு நிலை விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் இ.மாதவன் அவர்களும், வவுனியா தெற்கு வலயத்தின் விஞ்ஞான கள கற்கை நிலைய முகாமையாளர் ஜெய்கீசன் அவர்களும், அத்தோடு வடக்கு, தெற்கு வலயத்தின் அதிபர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், மாணவர்கள் பெற்றோர்களென பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.