பருத்தித்துறையில் வீடொன்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 3 ஆம் குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்றைய தினம் (மே 28) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய தியாகராசா சந்திரதாஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article