பருத்தித்துறையில் உடைமையில் கஞ்சா வைத்திருந்த இளைஞன் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பருத்தித்துறை, கொற்றாவத்தையில் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை மாவட்டப் பொலிஸ் விசேட குற்றத் தடுப்புப் பிரிவு சந்தேகநபரைக் கைது செய்துள்ளது. சந்தேகநபரிடம் இருந்து 28 கிராம் 100 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share this Article