பயணிகளின் பொதியில் இருந்து நகை திருடிய விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வெளிநாடு செல்வதற்காக வருகைதரும் பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனைகளை மேற்கொள்ளும் 29 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் தமது கடமையின்போது இந்த தங்க நகைகளை திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருடிய நகைகளை, அவர் நீர்கொழும்பில் உள்ள அடகு நிலையம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share this Article