இலங்கை சிறு படகு வலித்தல் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது சிறு படகு வலித்தல்போட்டித் தொடரின் ட்றாகன் படகு வலித்தல் இறுதிப் போட்டியில் முதன்முதலாக பங்குபற்றி நெடுந்தீவு மகாவித்தியாலய ஆண் , பெண் இரு அணிகளும் சம்பியன் பட்டத்தினை வென்று சாதனை படைத்துள்ளனர்.
படகு வலித்தல் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலயம், தம்பாட்டி தமிழ் கலவன் வித்தியாலயம் – அணி A, தம்பாட்டி தமிழ் கலவன் வித்தியாலயம் – அணி B என்பனவும்
படகு வலித்தல் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி, தம்பாட்டி தமிழ் கலவன் வித்தியாலயம் என்பனவும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை சிறு படகு வலித்தல் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது சிறு படகு வலித்தல்போட்டித் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு இன்று (செப். 16) முப்படையினரின் ஏற்பாட்டில் கடற்படையினரின் ஒழுங்குபடுத்தலில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வுகள் அனைத்தும் மண்டைதீவில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த படகு வலித்தல் திடலில் இடம்பெற்றது.