நோயாளர்சேவை பாதிப்படையாது, மருந்துப் பொருள்கள் வருகின்றது- பணிப்பாளர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய உடனடியாக 9 பார ஊர்திகளில் மருந்துப் பொருள்கள் எடுத்து வரப்படுவதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் நேற்று சனிக்கிழமை(09/05) அதிகாலை தீ விபத்தின் காரணமாக எரிந்து நாசமாகியது.

இது தொடர்பில் பணிப்பாளர் தெரிவிக்கையில்,

இதன் காரணமாக போதனா வைத்தியசாலை நோயாளர்களிற்கு வழங்கும் எந்தவொரு சேவையும் பாதிப்படையாது தொடர்ச்சியாக முன்னெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதேகாலத்தில் தீ விபத்திற்கான காரணம் மற்றும் தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பு என்பவற்றை கண்டறியவதற்காகவும் உடனடியாக மத்திய சுகாதார அமைச்சில் இருந்து ஓர் விசாரணைக் குழு போதனா வைத்தியசாலைக்கு வரவுள்ளனர்.

இவை அனைத்தும் இடம்பெறும் காலத்தில் போதனா வைத்தியசாலையில் இருந்து நாளை 3 பார ஊர்திகள் கொழும்பு சென்று தேவையான மருந்துப் பொருள்களை ஏற்றிவரவுள்ளதுடன் மத்திய மருந்தகத்தில் இருந்து 5 பார ஊர்தியும் அநுராதபுரம் வைத்தியசாலை வாகனம் ஒன்றுமாக மொத்தம் 9 பார ஊர்திகளில் தேவையான அனைத்து வகை மருந்துகளும் எதிர்வரும் 4 தினங்களிற்குள் எடுத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றார்.

Share this Article