நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நேற்றைய தினம் (Aug – 4) நெடுந்தீவில் இடம் பெற்றது. மக்கள் ஆவலுடன் இணைந்து கொண்டு தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டுள்ளமையினை அவதானிக்க முடிந்தது.
நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயம், நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி , நெடுந்தீவு கிழக்கு சுப்பரமணிய வித்தியாயலம் ஆகிய 03 நிலையங்களில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம் பெற்றது.
மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 412 பேரும், றோ.க.மகளிர் கல்லூரியில் 506 பேரும், சுப்ரமணிய வித்தியாலயத்தில் 466 பேரும் மொத்தம் 1384 பேர் நேற்றைய தினம் தடுப்பூசியினைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஒரு சிலருக்கு ஒவ்வாத நிலமைகள் ஏற்பட்ட போதும் ஏனையோருக்கு எவ்விதமான பிரச்சனைகளும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் தடுப்பூசியினைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலமை அவதானிக்க முடிந்தது மேலும் இரண்டு நிலையங்களை உருவாக்கியிருப்பின் மக்கள் இலகுவாக பெற்றுக் கொண்டிருக்க முடியும்
இதனால் ஏற்கனவே காலை 08.00 மணி முதல் 1.00 மணிவரைக்கும் இச் செயற்பாடு மேற்கொள்வதற்கான நிகழ்சி நிரல் குறிக்கப்பட்ட போதும், மாலை வேளை வரைக்கும் செயற்பாடு தொடர்ந்தது. இதனால் மாலை நேரப் போக்குவரத்தும் கால தாமதமாகியாதல் மக்கள் சில அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.