கனடா தேசத்தில் இயங்கும் கே.கே. சகோ இசைக் கல்லூரி (K.K.Bro Music Academy) யின் இயக்குணர் நெடுந்தீவு மாவிலி செல்வன் அவர்களது முயற்சியில் தழிழர் திருநாளம் சித்திரைப் பிறப்பன்று வெளிவருகின்றது நெழுவினி நாயகனே எனும் பக்தி பாடல்கள் இசைத்தட்டு.
நெடுந்தீவு மேற்கில் அமைந்துள்ள நெழுவினிப்பிள்ளையார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவதோடு ஒவ்வொரு வருடமும் சித்திரை வருடப்பிறப்பன்று தேர்திருவிழா மிகவும் சிறப்புடன் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ் ஆலயத்தின் தேர்த்திருவிழாவன்று நெழுவினி நாயகனை புகழ்ந்து வெளியீடு செய்வது போற்றுதற்குரியது.
இவரது முயற்சியில் அண்மையில் நயினாதீவு நாகபூசணி அம்மன் புகழ், நல்லூர் முருகன் புகழ் சிவன் மலை போன்ற பல பக்திபாடல்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் எமது அடுத்த சந்ததிக்கு இசைக்கல்லூரி அமைத்து இசைத்துறையினை வளாத்து வரும் இவரது செயற்பாடு பாரட்டுதற்குரியது.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பினால் நடாத்தப்படும் சகல நிகழ்வுகளிலும் இவரதும் மிகச் சிறப்பான பங்கு பற்றல் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கனடா மக்கள் ஒன்றியத்தின் வெள்ளி விழா நிகழ்வில் புலவர் அமுது அவர்களது எழுத்துருவாக்கத்தில் உருவான மாணிக்கத்தீவினிலே எனும் நெடுந்தீவு புகழ் பாடலினை மிக சிறப்பாக அரங்கேற்றியிருந்தமை பாரட்டுதற்குரியது.
தற்போது வெளியீடு செய்யப்படும் நெழுவினி நாயகனே பக்தி பாடலில் எமது நெடுந்தீவினை சேர்ந்த பல்வேறு எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்களான மதிப்பிற்குரிய திரு மாவிலி மைந்தன் எஸ்.சண்முகராஜா மற்றும் பசூவூர் கோபி என அழைக்கப்படும் ஐயக்குட்டி கோவிந்தன் மற்றும் பலா் இப் பாடல் வரிகளை எழுந்தியிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும்.