தீவக வலயமட்ட துடுப்பாட்டப் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய 20 வயதுப் பிரிவு பெண்கள் அணியினர் 3ம் இடத்தினைப்பெற்று மாகாணமட்டப்போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்டு பாடசாலைக்கும் நெடுந்தீவுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டித் தொடரில் 01 வது இடத்தினை அனலைதீவு சதாசிவம் மகா வித்தியாலயமும் , 02 வது இடத்தினை புங்குடுதீவு மகா வித்தியாலயமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.