தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறிகட்டுவான் – நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகு போக்குவரத்துக்கான அனுமதி கிடைத்தமையினை அடுத்து இன்று (மே 25 சனிக்கிழமை ) காலை இடம்பெற்றது.
நெடுந்தீவில் தங்கியிருந்த சுற்றுலாவிகள், மற்றும் உள்ளூர் பயணிகள் என சுமார் 200 மேற்பட்டோர் இன்று காலை நெடுந்தீவு துறைமுகத்தில் கூடியதுடன் சீரற்ற காலநிலையால் குமுதினிப் படகில் குறிப்பிட்ட அளவிலான பயணிகளை ஏற்றியதுடன் ஏனையோர் நிலைமையைக் கருத்திற்கொண்டு ஒழுங்கு செய்யப்பட்ட தனியார் படகான கரிகணன் மூலம் நெடுந்தீவில் இருந்து ஏற்றிச்செல்லப்பட்டனர்.
இதேவேளை யாழ் நகரில் தங்கியிருந்த மக்கள் குமுதினி மற்றும் தனியார் படகுகள் மூலம் நெடுந்தீவை சென்றடைந்துள்ளனர்.
நேற்றையதினம் (மே 24) படகு சேவைகள் இடம்பெறாமையால் நெடுந்தீவிலும், யாழ் நகரிலும் பெருமளவு மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மற்றும் தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.