நெடுந்தீவு சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்றம் இவ்வருடம் நெடுந்தீவில் “தவக்கால ஆற்றுகையினை”எதிர்வரும் ஏப்பிரல் 06 இல் நடாத்ததிட்டமிட்டுள்ளது .
இதன் முதன்மை நிகழ்வாக நெடுந்தீவு பங்குத்தந்தையும் சென் அன்ரனீஸ்நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்றத்தின் போசகருமான அருட்பணிப.பத்திநாதன் அடிகளாரின் தலைமையிலும் ஆசீருடனும் திருப்பாடுகள்ஆற்றுகையில் பங்குபெறும் கலைஞர்களுக்கான பிரதிகள் வழங்கும் நிகழ்வுஅண்மையில் சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக அரங்கத்தில்இடம்பெற்றது.
இந் நிகழ்வில் நாடக மன்ற நிர்வாகத்தினர் மற்றும் கலைஞர்கள்இணைந்திருந்தமை குறப்பிடத்தக்கது.