நெடுந்தீவில் இளைஞர் கொலை தொடர்பில் தடயவியல் பொலிசார் இன்று (ஜூன் 20) காலை நெடுந்தீவில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தடயவியல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துவிட்டு சம்பவத்தில் இறந்தவரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் அதிகாலை வேளை வந்தபோதே நெடுந்தீவு வைத்தியசாலை அருகில் வைத்து மோட்டார் சைக்கிளை வழிமறித்த குழுவினர் தாக்குதலை மேற்கொண்டபோது ஒருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில் அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ் (அமல்-வயது 22) என்ற இளைஞர் வழிமறித்த குழுவினரால் தாக்கப்பட்டு இறந்துள்ளதாகவே தெரியவருகின்றது.
இறந்தவரின் சடலம் நெடுந்தீவு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலை பகுதியில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடியியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் நெடுந்தீவு பொலிஸ் நிலையம் அமைந்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.