நீர்த் தொட்டிக்குள் வீழ்ந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (ஓகஸ்ட் 25) மாலை வீட்டு முற்றத்தில் கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழுந்து லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே உயிரிழந்துள்ளது.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் தேடியுள்ளனர். இதன்போது குழந்தை நீர்த்தொட்டியில் வீழுந்துள்ளமை கண்டறியப்பட்டது.

உடனடியாக குழந்தையை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தசம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article