நீதிமன்றத்தில் வைத்து கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்ய உதவிய சட்டத்தரணி கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்யப்பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைக்க உதவி ஒத்தாசை வழங்கியமைமற்றும் போலி சட்டத்தரணி அடையாள அட்டையைத் தயாரிக்க உதவியகுற்றச்சாட்டில் ஒரு சட்டத்தரணி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று (ஒக்.28) கடவத்தைபிரதேசத்தில் வைத்து இந்தச் சந்தேகத்திற்கிடமான சட்டத்தரணி கைதுசெய்யப்பட்டார்.

கைது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது,

குறித்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கைத் துப்பாக்கியை  மறைக்கும்நோக்குடன், இஷாரா செவ்வந்திக்கு குற்றவியல் சட்டக்கோவையின் பிரதியைவழங்குவதற்கும் இந்த சட்டத்தரணி செயற்பட்டுள்ளதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன.

இந்த உதவிகள் காரணமாக, யாரும் எதிர்பாராத விதமாக பலத்த பாதுகாப்புக்குமத்தியில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட பாதாள உலக சந்தேக நபர்ஒருவரை, மிக இலகுவாகக் கொலை செய்யத் தேவையான உதவியும்ஆலோசனையும் கிடைத்துள்ளது.

இதேவேளை இந்த சட்டத்தரணி தனது தொழில்முறைப் பிரமாணத்தைக்கூடப்பணத்திற்காக விற்று, அதனை மீறி, இந்த மோசமான குற்றச் செயலுக்கு உதவிசெய்துள்ளமை தெரியவந்துள்ளது.

Share this Article