நிபா வைரஸ் அச்சுறுத்தல் – எதிர்கொள்ளத் தயாராகும் இலங்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இனங்காணப்பட்டுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் ‘நிபா’ வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இன்னும் சில தினங்களில் அவை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று இது குறித்து கருத்து தெரிவித்த வைத்தியர் ஜானகி அபேநாயக்க கூறியுள்ளார்

Share this Article