நிகழ்நிலை கொள்வனவுகளை இலக்குவைத்து இணைய மோசடிகள் அதிகரிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நிகழ்நிலை மூலமாகப் பொருட்களை வீடுகளுக்கே எடுத்துவரும் கொள்வனவு செய்வோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இணையவழி மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாடிக்கையாளர்கள் நிகழ்நிலை ஊடாக கொள்வனவுக்காக பதிவு செய்யாத பொருட்கள் விநியோகிக்கிக்கப்படும் போது மூன்றாம் தரப்பினரால் ஏற்படுத்தப்படும், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவுருத்தியுள்ளது.

இவ்வாறான மோசடிகளில், போது குறித்த பதிவு செய்யாத செய்யப்படாத பொருளை இரத்து செய்ய வேண்டும் எனக் கூறி குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செயலி ஊடாக இணைய இணைப்பு ஒன்றினை அனுப்பிவைக்கப்படுவதாகவும், குறித்த இணைப்பை அனுகுவதன் மூலம். இரகசியக் குறியீட்டைப் பெற்று, தரவுகளை கையாளக் கூடிய செயலிக் கோப்புகளைப் மோசடி காரர்கள் பதிவிறக்கம் செய்ய வைப்பதன் மூலம் தொலைபேசி , கணினியில் உள்ள தரவுகளை பெற்றுக்கொள்கின்றனர்.

அத்தோடு, போலியான விநியோக முகவர்களும் நேரடியாக வந்து, பொருள் கொள்வனவுக்கான பதிவை இரத்து செய்வதாகக் கூறி இணைப்பை அனுகுமாறு தெரிவித்து, வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் மோசடிகாரர்களால் திருடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஆகையால், அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளை அனுகுவதையோ, ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மற்றும் பின் எண்களைப் பகிர்வதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகத்திற்கிடமான செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாமெனவும், விநியோக முகவரின் அடையாளத்தை நேரடியாக உறுதிப்படுத்துமாறும், மோசடி தொடர்பில் சந்தேகம் ஏற்படின் உடனடியாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது

Share this Article
Leave a comment