நாவற்குழி பாலத்திற்குள் மலக்கழிவு!- பிரதேச சபையிடம் முறைப்பாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட நாவற்குழி பாலத்திற்கு மேலாக உள்பகுதியில் சட்டவிரேதமான முறையில் சுற்றாடலுக்கும் நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மலக்கழிவுகள் பெருமளவில் கொட்டப்பட்டிருப்பது தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் பிரதேச சபையினரால் மேற்கொள்ளப்பட்ட களவிஜயத்தில் இச் சட்டவிரோத செயல் உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாண பகுதியில் இயங்கும் தனியார் சுத்திகரிப்பு சேவையை சேர்ந்த வாகனங்கள் இப்பகுதியில் கழிவகற்றலில் ஈடுபட்டதையும் இரவு நேரங்களில் இச்சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்கான விசேட களச்சுற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் மேலதிகமாக பொலிசாரின் உதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவுக்கின்றன.

Share this Article